Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

ADDED : ஜூலை 14, 2024 03:16 AM


Google News
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், புகழூர் அடுத்த நடையனுார் அருகே, சொட்-டையூரை சேர்ந்தவர் சுந்தரேசன், 50.

இவர், நொய்யலில் இருந்து, வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். நடையனுார் பஸ் ஸ்டாப் அருகே சென்-றபோது, அதே சாலையில், மண்மங்கலம் அருகே, நன்னியூர் புதுார் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 33, என்-பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், சுந்தரேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுந்தரேசனை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சுந்தரே-சனின் மனைவி முருகேஸ்வரி, 41, கொடுத்த புகார்படி, வேலாயு-தம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us