Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 2 பேர் 'போக்சோ'வில் கைது

ADDED : ஜூலை 03, 2024 07:27 AM


Google News
கரூர்: கரூர் அருகே, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, இரண்டு பேரை மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செல்ல பாண்டியன், 45; ஓட்டல் தொழிலாளி. ராமநாதபுரம் மாவட்டம், கீழபழனியூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார், 30; டிரைவர். இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சகோதரிகளான, 14, 13 வயதுடைய சிறுமிகளுக்கு, செல்-லபாண்டியன், பிரதீப்குமார் ஆகியோர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சிறுமிகளின் தாய் கொடுத்த புகாரின்படி, கரூர் மகளிர் போலீசார் செல்ல பாண்டியன், பிரதீப் குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us