/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொழிற்பேட்டையில் 'சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கணும்' தொழிற்பேட்டையில் 'சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கணும்'
தொழிற்பேட்டையில் 'சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கணும்'
தொழிற்பேட்டையில் 'சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கணும்'
தொழிற்பேட்டையில் 'சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்கணும்'
ADDED : ஜூலை 23, 2024 11:55 PM
கரூர் : கரூர் அருகே, வாகனம் மோதியதில் சேதமடைந்த சிக்னல் கம்-பத்தை, சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.
கரூர்-திருச்சி பழைய சாலை பசுபதிபாளையம் அருகே, தொழிற்-பேட்டை செயல்படுகிறது. மேலும் அதே பகுதியில் கோவில், ஓட்டல்கள் மற்றும் ஏராளமான குடிருப்புகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், தொழிற்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தவிர்க்கவும், சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, கரூர் தொழிற்பேட்டை முதல், திருச்சி சாலை வரை சாலை விரிவாக்க பணிகள், இரண்டு பக்கமும் நடந்-தது. அப்போது, வாகனங்கள் தாறுமாறாக சென்றதால் தொழிற்-பேட்டையில் இருந்த, சிக்னல் கம்பம் சேதமடைந்தது. தற்-போது, சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில், தொழிற்-பேட்டையில் சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சீரமைக்க-வில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். எனவே, சேமடைந்த சிக்னல் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.