Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி விறுவிறு

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி விறுவிறு

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி விறுவிறு

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி விறுவிறு

ADDED : ஜூலை 17, 2024 08:55 AM


Google News
கரூர், : நெரூர்-உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வரு-கிறது.

காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கரூர் மாவட்டம் நெரூர், கிழக்கு கரையில் திருச்சி மாவட்டம் உன்னியூர் உள்ளது. காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி போன்ற பகுதி

களில் இருந்து நெரூர் செல்ல வேண்டும் என்றால், கரூர் அல்லது மோகனுார் வழியாக செல்ல வேண்டும். இதனால், 15 முதல், 20 கி.மீ.,வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. நெரூர் - உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்-பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை-யாகும். இதன்படி, 101.30 கோடி ரூபாய் மதிப்-பீட்டில் பாலம் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

இது குறித்து , மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கூறியதாவது: இந்த உயர்மட்ட பாலம், 1,100 மீட்டர் நீளம், 26 துாண்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இணைப்பு சாலை-யுடன் சேர்ந்து பாலம், 2,245 மீட்டர் நீளம். பாலத்தின் மொத்த அகலம், 12.90 மீட்டர்; வண்டி வழிகள் 10.50 மீட்டர் இருக்கும். இருபுறமும் நடைபாதை இருக்கும். உன்னியூர் பக்கத்தில் உள்ள அணுகு சாலையின் ஒரு பகுதியாக கால்-வாயின் குறுக்கே சிறு பாலமும் கட்டப்படும். கடந்த பிப்., தொடங்கப்பட்ட பாலம் கட்டுமான பணியில், 60 சதவீதம் முடிந்துள்ளது.

தற்போது பாலம் துாண்கள் மற்றும் இணைப்பு சாலை அமைக்கு பணி வேகமாக நடந்து வருகி-றது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்தால் பணிகள் மேற்கொள்ள முடி-யாது. நீர் வரத்து நின்ற பின் பணிகள் மேற்-கொள்ள முடியும். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us