பெயின்டரை அடித்துஉதைத்த 2 பேர் கைது
பெயின்டரை அடித்துஉதைத்த 2 பேர் கைது
பெயின்டரை அடித்துஉதைத்த 2 பேர் கைது
ADDED : மார் 15, 2025 02:07 AM
பெயின்டரை அடித்துஉதைத்த 2 பேர் கைது
கரூர்:கரூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடையில், பெயின்டரை அடித்து உதைத்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயனுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 24, பெயின்டர். இவர் கடந்த, 11ல் தான்தோன்றிமலையில் உள்ள, டாஸ்மாக் மதுபான கடையில், மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, ராயனுாரை சேர்ந்த சந்திரசேகர், 50; முனியப்பன், 45; ஆகியோரும், எதிரே அமர்ந்து மது அருந்தினர். பிறகு, சிறிது நேரத்தில் குடிபோதையில் கோவிந்தராஜை, தகாத வார்த்தையால் பேசி, சந்திரசேகரும், முனியப்பனும் அடித்து உதைத்துள்ளனர்.
அதில், காயமடைந்த கோவிந்தராஜ், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு, கோவிந்தராஜ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார் சந்திரசேகர், முனியப்பன் ஆகிய, இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.