/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல் கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
ADDED : மார் 22, 2025 01:43 AM
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்டில், ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரூர் நகரில் தனியார் பஸ்கள், மினி பஸ்களில் விதவிதமான ஒலிகளில், ஏர்ஹாரன்களை டிரைவர்கள் பயன்படுத்துவதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அதிக ஒலி கொண்ட ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால், பெரியவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் பஸ் ஸ்டாண்டில், விதி முறைகளை மீறி தனியார் பஸ்கள், மினி பஸ்களில் பொருத்தப்பட்ட, 20க்கும் மேற்பட்ட ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சகிராபானு, நந்தகோபால் ஆகியோர் பறிமுதல் செய்தனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.