Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை மீண்டும் கரூருக்கு மாற்ற விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 06, 2024 01:08 AM


Google News
கரூர், : 'தாராபுரத்துக்கு மாற்றப்பட்ட அமராவதி ஆறு வடிநிலக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தை, கரூருக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்' என, கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்-துள்ளனர்.

பழைய கோவை மாவட்டம் திருப்பூர் அருகே உடுமலை பேட்-டையில் கடந்த, 1954 ல் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜியால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1958 ல் காமராஜ் முதல்வ-ராக இருந்த போது அமராவதி அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்-கப்பட்டது. மொத்த உயரம், 90 அடியாகும். கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கிளை ஆறுகளான வரதமாஞ்சாதி, பாம்பாறு, நஞ்சகாளக்குறிச்சி மற்றும் குடகானாறு மூலம் அமராவதி ஆற்-றுக்கு தண்ணீர் வருகிறது. இறுதியாக, கரூர் மாவட்டத்தில் திரு-முக்கூடலூர் பகுதியில் காவிரியாற்றில் அமராவதி ஆறு கலக்கி-றது.

தற்போது, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய, புதிய ஆயக் கட்டுகளில் உள்ள வாய்க்கால் பகுதிகளில், 55 ஆயிரத்-துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 11 வாய்க்கால்களில், ஒரு சில வாய்க்கால் பகுதியை தவிர மற்ற பகுதிகளில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதனால், விவசாயிகளின் கோரிக்கை-படி, அமராவதி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவ-லகம், பல ஆண்டுகளாக கரூரில் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகத்தின் மூலம், அமராவதி அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு தேதி, வாய்க்கால் மராமத்து பணி குறித்த விபரம், சாகுபடி விபரங்களை, கரூர் மாவட்ட விவசா-யிகள் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், கரூரில் இருந்து செயற்பொறியாளர் அலுவலகம் கடந்த, 2012 இறுதியில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து, கரூர் மாவட்டத்தை சேர்ந்த அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் கூறியதாவது:

அமராவதி ஆறு மூலம், கரூர் மாவட்டத்தில் நடந்து வந்த, விவ-சாய சாகுபடி பணி படிப்படியாக குறைந்து வருகிறது. பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பெரும் பாலான வாய்க்காலில் புதர் மண்டி கிடக்கிறது. சில வாய்க்காலில் சாயக்கழிவு தான் ஓடு-கிறது. அமராவதி ஆற்றில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், மீதமுள்ள சில வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் வறண்டு போய் விட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்-கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறை-முக விவசாய வேலை கிடைக்கவில்லை. அமராவதி ஆற்றுப் பகுதி குறித்து விவசாயிகள் புகார் செய்ய, செயற்பொறியாளர் அலுவலகம் கரூரில் இருந்தது.

இதை கடந்த, 2012ல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு மாற்றி விட்டனர். இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பழைய ஆயக்-கட்டு பகுதி விவசாயிகள் மனு கொடுக்கவே, 70 கிலோ மீட்டர் தாராபுரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும், பொறியாளர் அலுவலகம் மீண்டும் கரூருக்கு மாற்றப்-படவில்லை. அதை மீண்டும், கரூருக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us