/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு
ADDED : மார் 23, 2025 01:08 AM
நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகலைக்குழுக்கள் தேர்வு
கரூர்:கரூர், நாரதகானசபாவில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், நம்ம ஊரு திருவிழா கலைக்குழுக்கள் தேர்வு நேற்று நடந்தது.
மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி முன்னிலை வகித்தார். கோவை, தஞ்சாவூர், வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய, எட்டு இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் தேர்வு நடந்தது. நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறைநடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு, பல்சுவை நிகழ்ச்சி ஆகிய கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.