/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது 'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
ADDED : மார் 23, 2025 01:06 AM
'கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது'
கரூர்:கரூர் பசுபதிபாளையத்தில், கரூர் சட்டசபை தொகுதி தி.மு.க., இளைஞர் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மின்துறை அமைச்சரும், மாவட்ட செயலருமான செந்தில்பாலாஜி பேசியதாவது:
தமிழகத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில், ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நாம் கட்டும் வரியை திருப்பி கொடுக்க, மத்திய அரசு மறுத்து வருகிறது. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில், தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பிரச்னையை, இந்தியாவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் முன்னெடுப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின், முன்னெடுத்திருக்கிறார்.
இந்த பட்ஜெட்டில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி., படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், கரூரில் டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், 250 ஏக்கரில் புதிய சிப்காட் இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 2021ல் கரூரில் வேளாண் கல்லுாரி, அரவக்குறிச்சில் கலை அறிவியல் கல்லுாரி என, கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கரூர் மாநகர செயலர் கனகராஜ், மாநகர பகுதி செயலர் ராஜா, ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.