/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள்
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள்
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள்
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள்
ADDED : மார் 18, 2025 01:53 AM
பள்ளப்பட்டி நகராட்சி பகுதியினர்வரிகளை செலுத்த வேண்டுகோள்
அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் பள்ளப்பட்டி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், நகராட்சி கடைகளுக்கான வாடகை, கடைகளுக்கான லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட வரியினங்களை, வரும் மார்ச், 31க்குள் செலுத்த வேண்டும். இதுகுறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
பள்ளப்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் யாரேனும், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால், 'ஆன்லைன்' மூலமாகவும் வரியினங்களை செலுத்தலாம். பள்ளப்பட்டி நகர் முழுவதும், இதுகுறித்து அறிவிப்பு செய்யும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.