/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள் வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
ADDED : மார் 14, 2025 01:32 AM
வரி செலுத்தாதவர்கள் செலுத்த வேண்டுகோள்
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் பேரூராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரவக்குறிச்சி பேரூராட்சியில் 2024-25ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக, உடனே நிலுவையில் உள்ள வரித்தொகையை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வரிகளை செலுத்தவில்லை என்றால், பாக்கி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும். பேரூராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற, உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையையும் வரும், 17ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.