ADDED : ஜூலை 12, 2024 01:06 AM
கிருஷ்ணராயபுரம், மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட, புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கிருஷ்ணராயபுரம் வக்கீல்கள் சங்கம் சார்பில், கடைவீதி வழியாக ஊர்வலாக வந்து தபால் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் கிருபா, துணை செயலாளர் தினேஷ், பொருளாளர் விமல்ராஜ், வக்கீல் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.