/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம் நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்
நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்
நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்
நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்
ADDED : மார் 28, 2025 01:12 AM
நெல் வயல்களில் களை எடுக்கும் பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி கிராம பகுதிகளில், விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடிக்கு நெல் வயல்களில், களைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய பகுதி களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, முதல்போக அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் உழவு செய்து, மீண்டும் நெல் சாகுபடி செய்யும் வகையில் இரண்டாம் போக நெல்
நாற்றுகள் நடும் பணி நடந்தது.நடவு செய்யப்பட்ட வயல்களில், நாற்றுகள் நடுவில் களைகள் முளைத்தால் நெற் பயிர்கள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். மேலும் நெற் பயிர்கள் நல்ல முறையில் வளர்ச்சியடையும் வகையில், களைகள் அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.