/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி
ADDED : மார் 23, 2025 01:07 AM
குண்டும், குழியுமான சாலை: ஓட்டுனர்கள் கடும் அவதி
கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
கரூர் மாநகராட்சி, 38 வது வார்டு கொளந்தானுார் அம்மன் நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டார் வசதியுடன், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. அதில், பொது மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வீணாக சாலையில் சென்றது. அப்போது, சாலை குண்டும், குழியுமாக மாறியது.
அந்த வழியாக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், அரசு டவுன் பஸ்கள், கார்கள் செல்கின்றன. சாலையை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. அம்மன் நகர் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சின்டெக்ஸ் தொட்டியை மாற்றி, புதிதாக தார்ச்சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.