/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
ADDED : மார் 13, 2025 02:24 AM
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசிமக தேரோட்டம்
கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4 ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபி ேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. கடந்த, 10ல் கோவில் மண்டபத்தில், திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை, வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனர்.
நாளை மாலை, 6:00 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக கோவில் எதிரில் உள்ள குளத்தில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. வரும், 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.