/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி
கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி
கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி
கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி
ADDED : மார் 18, 2025 01:43 AM
கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் வேலை உறுதி திட்டப்பணியாளர் அவதி
கரூர்:கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், தேசிய ஊரக வேலை உறுதி, திட்டப்பணியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள, 12,600 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. கரூர் மாவட்டத்தில், 157 கிராம பஞ்சாயத்தில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம், வாய்க்கால் துார் வாருதல், சாலையோரம் உள்ள முட்புதர்களை அகற்றுதல், குளத்தை துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோடைக்காலத்தையொட்டி வழக்கத்துக்கு மாறாக, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப் பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த, சில நாட் களாக சராசரியாக, 100 டிகிரி முதல், 102 டிகிரி வெயில் கொளுத்துகிறது. க.பரமத்தி பகுதியில் அதிகப்பட்சமாக, வெயிலின் தாக்கம் உள்ளது.
இதனால், கரூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள், வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.