Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ராயனுாரில் குளிர்பதன கிடங்குபொருட்கள் சேமிக்க அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குபொருட்கள் சேமிக்க அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குபொருட்கள் சேமிக்க அழைப்பு

ராயனுாரில் குளிர்பதன கிடங்குபொருட்கள் சேமிக்க அழைப்பு

ADDED : மார் 14, 2025 02:07 AM


Google News
ராயனுாரில் குளிர்பதன கிடங்குபொருட்கள் சேமிக்க அழைப்பு

கரூர்:- ராயனுாரில் உள்ள குளிர்பதன கிடங்கில் பழங்கள், காய்கறிகள் போன்ற வேளாண் பொருட்களை சேமித்து வைக்கலாம்.

கரூர் மாவட்டம், ராயனுாரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைந்துள்ளது. கிடங்கில் பழங்கள், காய்கறிகள், உலர் பொருட்கள் போன்ற வேளாண் விளை பொருட்களை வாடகை அடிப்படை யில் ஒப்பந்தம் மேற்கொண்டு விவசாயிகள், வியாபாரிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியோர் சேமித்து வைக்க முடியும். திட்டத்தில் பயன் பெற ddab.karur@gmail.com என்ற இ.மெயில் முகவரியில், 8220915157, 9894971906 என்ற மொபைல் எண்களில், வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), ராயனுார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us