Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்தெப்பத்தேர் உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்தெப்பத்தேர் உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்தெப்பத்தேர் உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்தெப்பத்தேர் உற்சவம்: பக்தர்கள் பரவசம்

ADDED : மார் 15, 2025 02:10 AM

Google News
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில்தெப்பத்தேர் உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கரூர்:தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திஃஃருவிழா நேற்று மாலை நடந்தது.

கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4 ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. கடந்த, 10 ல் கோவில் மண்டபத்தில், திருக்கல்யாண உற்வசம், 12ல் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு கோவில் எதிரே உள்ள, தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. அதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ பெருமான் வலம் வந்தார்.

அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us