/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு
ADDED : மார் 13, 2025 02:04 AM
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: அரவக்குறிச்சி கல்லுாரி மாணவர் தேர்வு
அரவக்குறிச்சி:டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட, தமிழ்நாடு அணிக்கு அரவக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி உத்தரகாண்டில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில், 30 மாநிலங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இதில், தமிழக அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வரும் அஜய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் மாணவர் அஜய்குமாரை பாராட்டினர்.