Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ நிலத்தை அளக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது

நிலத்தை அளக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது

நிலத்தை அளக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது

நிலத்தை அளக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய இருவர் கைது

ADDED : மே 10, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே 11 சென்ட் நிலத்தை அளவீடு செய்ய ரூ.2000 லஞ்சம் வாங்கிய பிர்கா சர்வேயர், கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் மேல தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ பத்மநாபன் 71. இவருக்கு சொந்தமான நீண்டகரை பி வில்லேஜில் உள்ள 11 சென்ட் நிலத்தை அளவீடு செய்வதற்காக அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

கடந்த ஆறாம் தேதி தனது சொத்தை எப்போது அளவீடு செய்ய வருவீர்கள் என்று கேட்க சென்றபோது, நீண்டகரை கிராம உதவியாளர் ராஜா, நிலத்தை அளந்து 'எப்' லைன் சான்று தர ரூ. 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுபற்றி ஸ்ரீ பத்மநாபன், குமரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அவர்களது ஆலோசனைப்படி நேற்று ரசாயனம் தடவிய நான்கு ரூ.500 நோட்டுகளை கிராம உதவியாளர் ராஜா மற்றும் பிர்கா சர்வேயர் முகமது அஜ்மல்கானிடம் கொடுக்கும் போது அதை வாங்கிய இருவரையும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேல் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us