ADDED : மே 28, 2025 02:28 AM
நாகர்கோவில்:கேரளாவில் தென்மேற்குப்பருவமழை முன்னதாக தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாக உள்ளதால் பேச்சிப்பாறை ,பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சில நாட்களாக மழைக்கு ஏற்கெனவே 30 வீடுகள் இடிந்த நிலையில், நேற்று மேலும் 18 வீடுகள் இடிந்தது. பல இடங்களிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபடுகிறது. மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் சில கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.