ADDED : ஜூன் 11, 2025 02:12 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியை சார்ந்த ராஜகுமார் என்பவரது மகன் சக்திவேல் 25. வழக்கறிஞர். இவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதை பொருட்களான 12.08 கிராம் மெத்தம் பேட்டமைன் 12.08 கிராம், 0.42 மில்லி கிராம் எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் பறிமுதல் செய்யப்பட்டது. சக்திவேல் கைது செய்யப்பட்டார். அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று எஸ்.பி., ஸ்டாலின் தெரிவித்தார்.