/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ நிதி நிறுவன மோசடி நான்கு பேர் கைது நிதி நிறுவன மோசடி நான்கு பேர் கைது
நிதி நிறுவன மோசடி நான்கு பேர் கைது
நிதி நிறுவன மோசடி நான்கு பேர் கைது
நிதி நிறுவன மோசடி நான்கு பேர் கைது
ADDED : செப் 12, 2025 02:06 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பாக்கியபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இவர்கள் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் விளம்பரம் செய்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் இங்கு முதலீடு செய்தனர்.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் அவர்களுக்கான பணம் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது.
இதனால் பணம் மற்றும் நகைகளை முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மார்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் 58, எஸ்.பி.யிடம் புகார் செய்தார். அதில் 'அருமனை நிதி நிறுவனத்தில் 34 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் வட்டியுடன் பணத்தை தர மறுப்பதாக'கூறியிருந்தார்.
இதனை விசாரித்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அதன் இயக்குனர்களான அருமனை பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் லிபோரியா 60, மரப்பாடியை சேர்ந்த சூசை சார்லஸ் 57, ராபின் ஜோஸ் 47, மற்றும் மேலாளராக இருந்த மாத்தூர் கோணத்தைச் சேர்ந்த அனிஷா 32, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.