ADDED : செப் 13, 2025 01:49 AM
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த இன்ஜினியர் ஸ்டாலின் கிருபா, 39, பெங்களூருவில் பணியாற்றி வந்தார். இரண்டு விலை உயர்ந்த நாய்களை வளர்த்தார்.
சில நாட்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தவர், நேற்று முன்தினம் நாய்களுடன் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றார். ஒரு நாய் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று நீச்சல் அடித்த போது, அதனுடன் ஸ்டாலின் கிருபாவும் நீச்சல் அடித்தார். ஒரு கட்டத்தில் அவர் மூழ்கினார்.
எஜமானனை காணாத நாய் அந்த பகுதியில் நீந்திய படியே குரைத்துக் கொண்டிருந்தது. மற்றொரு நாய் நீந்தி கரை சேர்ந்து குரைத்தது. தீயணைப்பு வீரர்கள் ஸ்டாலின் கிருபா உடலை மீட்டனர்.