/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ வந்தே பாரத் ரயிலில் பை திருடிய கான்ட்ராக்டர் கைது வந்தே பாரத் ரயிலில் பை திருடிய கான்ட்ராக்டர் கைது
வந்தே பாரத் ரயிலில் பை திருடிய கான்ட்ராக்டர் கைது
வந்தே பாரத் ரயிலில் பை திருடிய கான்ட்ராக்டர் கைது
வந்தே பாரத் ரயிலில் பை திருடிய கான்ட்ராக்டர் கைது
ADDED : ஜூன் 04, 2025 01:33 AM
நாகர்கோவில்:நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாஸ்திரியின் லேப்டாப், பையை திருடிய கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல் செல்வதற்காக நாகர்கோவில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். தன்னை பார்க்க வந்த உறவினரை சந்திப்பதற்காக ரயில் இருந்து கீழே இறங்கி நின்றார். இந்த நேரத்தில் அவரது லேப்டாப் பேக்கை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் நாகர்கோவில் ரயில் நிலைய போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால் தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒருவர் கையில் பேக்குடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்வது தெரிய வந்தது. விசாரணையில் அவர் நாகர்கோவில் அருகே மேல காட்டு விளையைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.
கிருஷ்ணமணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.