/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு
மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு
மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு
மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள் மீது வழக்கு
ADDED : ஜூன் 05, 2025 02:45 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாதிக்காவிளையை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி மரியாஜோஸ் 67. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் சந்தோஷ்குமார். இவரது மனைவி ஷைனி மோள் 35. உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.
மரியா ஜோசுக்கும் சைனி மோளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஷைனி மோள் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து மாமியார் மரியாஜோஸ் மீது கொட்டினார். இதில் அவரது உடல் வெந்து அலறினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ஷைனிமோள் மாமியார் முதுகில் குத்தியுள்ளார்.
மரியா ஜோசை குடும்பத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஷைனி மோள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.