/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ படகு சவாரி கட்டண உயர்வு: கன்னியாகுமரியில் அமல் படகு சவாரி கட்டண உயர்வு: கன்னியாகுமரியில் அமல்
படகு சவாரி கட்டண உயர்வு: கன்னியாகுமரியில் அமல்
படகு சவாரி கட்டண உயர்வு: கன்னியாகுமரியில் அமல்
படகு சவாரி கட்டண உயர்வு: கன்னியாகுமரியில் அமல்
ADDED : ஜூன் 06, 2025 02:50 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்துக்கான கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்தது. இதற்கு சுற்றுலா பயணியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்ல, பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. சமீபத்தில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது.
அதன் மூலம், விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு மீண்டும் விவேகானந்தர் பாறைக்கு திரும்பி, படகில் கரைக்கு வருகின்றனர்.
இதற்காக ஒருவருக்கு சாதாரண கட்டணம் 75 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம், 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சலுகை கட்டணம், 30 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறப்பு கட்டணம் 300 ரூபாயில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு சுற்றுலா பயணியர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என, கன்னியாகுமரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.