Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கூகுள் பே மூலம் பண வசூல் எஸ். எஸ். ஐ. உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

கூகுள் பே மூலம் பண வசூல் எஸ். எஸ். ஐ. உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

கூகுள் பே மூலம் பண வசூல் எஸ். எஸ். ஐ. உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

கூகுள் பே மூலம் பண வசூல் எஸ். எஸ். ஐ. உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

ADDED : ஜூன் 26, 2025 02:08 AM


Google News
நாகர்கோவில்:கூகுள் பே செயலி மூலம் பணம் வசூலித்ததாக சிறப்பு எஸ். ஐ. உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் மார்த்தாண்டம், புதுக்கடை, களியக்காவிளை, ஆரல்வாய்மொழி பகுதிகளில் கனிமவள லாரி டிரைவர்களிடம் சில போலீசார் பணம் பெறுவதாக புகார்கள் வந்தது. இது குறித்து எஸ். பி., ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

அதில் கனரக வாகனங்களின் டிரைவர்களிடம் இருந்து கூகுள் பே செயலி மூலம் பணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு எஸ். ஐ ., ராஜா ஸ்டாலின், ஏட்டு சாலமன், டிரைவர் திபு ஆகிய மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மார்த்தாண்டம் சிறப்பு எஸ். ஐ. ஜான் டேவிட், அர்ஜுனன், ஏட்டு ஸ்டாலின் ஆகியோர் ரோந்து பணியின் போது மணல், ஜல்லி, ஏற்றி வரும் வாகனங்களின் டிரைவர்களிடம் கூகுள் பே மூலம் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜான் டேவிட் தென்தாமரைக் குளம் காவல் நிலையத்துக்கும் அர்ஜுனன் சுசீந்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us