/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கிரேன் மோதி 2 பேர் பலி: 10 பேர் காயம் கிரேன் மோதி 2 பேர் பலி: 10 பேர் காயம்
கிரேன் மோதி 2 பேர் பலி: 10 பேர் காயம்
கிரேன் மோதி 2 பேர் பலி: 10 பேர் காயம்
கிரேன் மோதி 2 பேர் பலி: 10 பேர் காயம்
ADDED : செப் 13, 2025 02:21 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி ரயில் நிலைய ரோட்டில் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்த கிரேன் மோதி இரண்டு பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் முன்புறமுள்ள ரோட்டில் நேற்று மாலை ஒரு கிரேன் வந்து கொண்டிருந்தது. அது திடீரென்று தாறுமாறாக ஓடியதால் ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் மோதியபடி சென்றது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இறந்தவர்களின் ஒருவர் கன்னியாகுமரி பேரூராட்சி த.வெ.க., நிர்வாகி முகமது ஷான்35, என்பதும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் கல்லுாரி மாணவர் சபரி கிரி 17, என்பதும் தெரியவந்தது. கிரேன் ஓட்டி வந்த டிரைவர் மயிலாடியைச் சேர்ந்த கணபதி ை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் கைது செய்யப்பட்டார். கிரேன் பறிமுதல் செய்யப்பட்டது.