/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கொதித்த எண்ணெய் சட்டியில் விழுந்த தொழிலாளி பலி கொதித்த எண்ணெய் சட்டியில் விழுந்த தொழிலாளி பலி
கொதித்த எண்ணெய் சட்டியில் விழுந்த தொழிலாளி பலி
கொதித்த எண்ணெய் சட்டியில் விழுந்த தொழிலாளி பலி
கொதித்த எண்ணெய் சட்டியில் விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜூலை 23, 2024 07:23 AM
நாகர்கோவில் : திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் மதகநேரியைச் சேர்ந்தவர் சுடலை 45. கன்னியாகுமரியில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை சமையலறையில் இவர் வேலை செய்த போது அருகில் வாணலியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. திடீரென தடுமாறிய சுடலை வாணலியில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு அலறினார்.
உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையிலும், பின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.