/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ 'இஸ்ரோ' ஊழியர்கள் பஸ் மோதியதில் இருவர் பலி 'இஸ்ரோ' ஊழியர்கள் பஸ் மோதியதில் இருவர் பலி
'இஸ்ரோ' ஊழியர்கள் பஸ் மோதியதில் இருவர் பலி
'இஸ்ரோ' ஊழியர்கள் பஸ் மோதியதில் இருவர் பலி
'இஸ்ரோ' ஊழியர்கள் பஸ் மோதியதில் இருவர் பலி
ADDED : மார் 13, 2025 01:48 AM
நாகர்கோவில்:விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஊழியர்கள் சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரியும் பணியாளர்களுக்கான பஸ் திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் சென்றது. பாம்பன்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.
இதில் கடை முன் நின்று கொண்டிருந்த பாம்பன் குளத்தைச் சேர்ந்த தொழிலாளிகளான ஜெய கிருஷ்ணன், 58, குணசேகரன், 65, பலத்த காயமடைந்தனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருவரும் இறந்தனர்.