/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ தங்கை திருமணத்துக்கு வந்த அக்கா மரணம் தங்கை திருமணத்துக்கு வந்த அக்கா மரணம்
தங்கை திருமணத்துக்கு வந்த அக்கா மரணம்
தங்கை திருமணத்துக்கு வந்த அக்கா மரணம்
தங்கை திருமணத்துக்கு வந்த அக்கா மரணம்
ADDED : ஜூன் 19, 2024 01:40 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே தங்கை திருமணத்துக்காக வெளிநாட்டிலிருந்து வந்த அக்கா மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஆலஞ்சியைச் சேர்ந்தவர் ஜெகன் பால், 38. இவரது மனைவி பிரபா, 34. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் வசித்தனர்.
பிரபாவின் தங்கைக்கும் கருங்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெகன் பால் குடும்பத்துடன் வந்தார். மணப்பெண் வீட்டில் மின்விளக்கு உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் காலை பிரபா தன் வீட்டின் முன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
வீட்டின் முன் போடப்பட்டிருந்த பந்தலை ஒட்டி இருந்த குப்பையை அகற்றிய போது பிரபா திடீரென மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணத்துக்காக போடப்பட்டிருந்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என கருங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.