/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ டியூஷன் செல்லாமல் மயானத்தில் விடிய விடிய தங்கிய சிறுவன் டியூஷன் செல்லாமல் மயானத்தில் விடிய விடிய தங்கிய சிறுவன்
டியூஷன் செல்லாமல் மயானத்தில் விடிய விடிய தங்கிய சிறுவன்
டியூஷன் செல்லாமல் மயானத்தில் விடிய விடிய தங்கிய சிறுவன்
டியூஷன் செல்லாமல் மயானத்தில் விடிய விடிய தங்கிய சிறுவன்
ADDED : ஜூன் 19, 2024 02:21 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே டியூஷனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு இரவு முழுவதும் மயான தகன மேடையில் தங்கிய சிறுவன் மீட்கப்பட்டான்.
குலசேகரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவனை அவரது தந்தை அப்பகுதியில் டியூஷனில் சேர்த்து விட்டார்.
விளையாட நேரம் இன்றி தவித்த சிறுவன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று சைக்கிளில் டியூஷனுக்கு செல்வதாக கூறிச்சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை.
இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வராததால் பெற்றோர் குலசேகரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் திருநந்திக்கரை பகுதியிலுள்ள மயானம் வழியாக ரப்பர் பால் வெட்ட தொழிலாளர்கள் சென்றபோது தகன மேடையில் சிறுவன் அமர்ந்து இருப்பதைக் கண்டனர்.
அவனிடம் விசாரித்த போது டியூஷனுக்கு செல்லாமல் இங்கு வந்து தங்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளான். அலைபேசியில் தொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து சிறுவனை அவரது தந்தை வந்து அழைத்து சென்றார். குலசேகரம் போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் கிடைத்த விவரத்தையும் பதிவு செய்தார்.