/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை
காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை
காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை
காரில் சென்ற தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை
ADDED : ஜூன் 25, 2024 10:50 PM
நாகர்கோவில்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கைமனம் விவேக் நகரை சேர்ந்தவர் தீபு 44. இவர் மண் அள்ளும் இயந்திரங்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
அப்பகுதியில் ஒரு ஒர்க் ஷாப் நடத்தினார். மனைவி விதுமோள் , பாலக்காட்டில் அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலையில் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு காரில் கோவைக்கு புறப்பட்டுள்ளார். நள்ளிரவில் இவரது கார் இண்டிகேட்டர் விளக்குகள் எரிந்தபடி களியக்காவிளை ஒற்றை மரம் பெட்ரோல் பங்க் அருகே நீண்ட நேரமாக நின்றது. பொதுமக்கள் பார்த்தபோது உள்ளே கழுத்து அறுபட்ட நிலையில் தீபு கிடந்தார்.
போலீசார் கார் கண்ணாடிகளை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்குகொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கார் அப்பகுதியில் நின்ற சிறிது நேரத்தில் ஒருவர் இறங்கி நடந்து செல்வது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் முதல் களியக்காவிளை வரையிலான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.