Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ ஒரு நாள் பொறுப்பில் முறைகேடாக பதிவு; பெண் சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது

ஒரு நாள் பொறுப்பில் முறைகேடாக பதிவு; பெண் சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது

ஒரு நாள் பொறுப்பில் முறைகேடாக பதிவு; பெண் சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது

ஒரு நாள் பொறுப்பில் முறைகேடாக பதிவு; பெண் சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே தோவாளையில் ஒரு நாள் பொறுப்பில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக பெண் சார் பதிவாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தைச் சேர்ந்தவர் முத்துசங்கர். இவரது மனைவி சுப்புலட்சுமி 33, இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பணிபுரிகிறார்.

பத்து மாதங்களுக்கு முன் தோவாளை சார் பதிவாளர் விடுப்பில் சென்றார். அவரது பணிகளை கவனிக்க சுப்புலட்சுமி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அப்போது தோவாளை சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நிலுவையில் இருந்த நிலம் தொடர்பான பத்திரங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டது. 20 பத்திரங்கள் வரை முறைகேடாக பதிவு செய்யப்பட்டது.

மறுநாள் பணிக்கு வந்த சார் பதிவாளர் மேகலிங்கம் இதுதொடர்பாக எஸ்.பி., சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்த தனராஜா 50, உதவியுடன் சார் பதிவாளர் சுப்புலட்சுமி இப்பத்திரங்களை முறைகேடாக பதிவு செய்தது தெரியவந்தது.

இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்பின் ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததும் தெரிந்தது. சுப்புலட்சுமி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று மாலை சுப்புலட்சுமி, தனராஜா, அலுவலக உதவியாளர் நம்பிராஜ், ஒப்பந்த பணியாளர்கள் ஜெயின் ஷைலா, டெல்பின் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us