ADDED : ஜூன் 11, 2024 06:30 AM
நாகர்கோவில் : பிரதமர் மோடி மே 30, 31 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.
இவர்கள் மோடி தியானம் செய்த இடத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். கடந்த இரண்டரை மாதங்களில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர்.