போதை மாத்திரை கடத்திய வாலிபர் கைது
போதை மாத்திரை கடத்திய வாலிபர் கைது
போதை மாத்திரை கடத்திய வாலிபர் கைது
ADDED : ஜன 06, 2024 11:29 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, சென்னை, அம்பத்துார் அடுத்த கல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி, 22, என்பவரிடம் இருந்த 4-0,000 ரூபாய் மதிப்புள்ள 4,000 போதை மத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரம்பாக்கம் போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.