ADDED : செப் 09, 2025 10:10 PM
ஸ்ரீபெரும்புதுார்:பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
தென்காசி, சிவகிரியைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன், 32. இவர், தாம்பரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று காலை 'யூனிகான்' பைக்கில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் சாலையில் சென்ற போது, 4வது குறுக்கு சாலையில் இருந்து வந்த லாரி, சரவண கார்த்திகேயன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.