/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம்: கலெக்டர் விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம்: கலெக்டர்
விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம்: கலெக்டர்
விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம்: கலெக்டர்
விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம்: கலெக்டர்
ADDED : ஜூலை 03, 2025 10:15 PM
காஞ்சிபுரம்:ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் திட்டத்தில், பழம், காய்கறி விதை தொகுப்புகளை பெற பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' என்ற புதிய திட்டம், வேளாண் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழக முதல்வரால் இன்று துவக்கி வைக்கப்பட உள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்க விருப்பமுள்ள பயனாளிகள் http://tnhorticulture.tn.gov. என்ற இணைய தளத்தில் இணைந்து தங்களது ஆதார் எண், மொபைல் போன் எண், முழு முகவரி, பயனாளி புகைப்படம் ஆகியவை உள்ளீடு செய்து பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.