/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 19, 2025 10:51 PM
காஞ்சிபுரம்:'தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர், தற்காலிக கடை அமைப்பதற்கான உரிமத்திற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகமாக பட்டாசு வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், அதற்கான தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
இ - -சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் அக்டோபர், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கடையின் பரப்பு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான 'புளூ பிரின்ட்' வரைபடம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கான ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இணையவழி விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணை முடிந்து, இணைய வழியிலேயே மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விபரத்துடனும், தற்காலிக உரிமத்திற்கான ஆணையை இ- - சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம். இந்த தற்காலிக உரிமம், 30 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது.
நிரந்தரமாக பட்டாசு விற்பனை உரிமம், கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.