/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிந்து விழும் நிலையில் மகளிர் கழிப்பறை இடிந்து விழும் நிலையில் மகளிர் கழிப்பறை
இடிந்து விழும் நிலையில் மகளிர் கழிப்பறை
இடிந்து விழும் நிலையில் மகளிர் கழிப்பறை
இடிந்து விழும் நிலையில் மகளிர் கழிப்பறை
ADDED : மே 16, 2025 02:26 AM

களியப்பேட்டை:உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன், மகளிர் கழிப்பறை கட்டப்பட்டது. பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்த துவக்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதை தொடர்ந்து முறையான பராமரிப்பின்மை காரணத்தால், மகளிர் கழிப்பறை கட்டடம் பழுதடைந்தது. மேலும், அக்கட்டடத்திற்குள் இருந்த பீங்கான்கள், குழாய் போன்ற கழிப்பறை உபயோக பொருட்களும் உடைந்து வீணானது.
தற்போது இக்கட்டடம் மிகவும் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பழுதான மகளிர் கழிப்பறை கட்டடம் அருகே குடியிருப்புகள் உள்ளன. மழை நேரங்களில் இக்கட்டடம் இடிந்து விழக்கூடும் என, அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
எனவே, களியப்பேட்டை கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கைவிடப்பட்ட மகளிர் கழிப்பறை வளாகத்தை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.