ADDED : மார் 23, 2025 08:06 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் சார்பில், மகளிர் தின கருத்தரங்கம் நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் சரஸ்வதி தலைமை வகித்தார். வழக்கறிஞர் புனிதா வரவேற்றார். கவிஞர் கலைச்செல்வி வெங்கடேசன், எழுத்தாளர் உதயலட்சுமி, கவிஞர் செல்வராசு ஆகியோர் கவிதை வாசித்தனர். ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி நித்யவாணி, சிறுகதை வாசித்தார்.
‛இந்தியாவின் பெண்கள் நிலையும் வாழ்வியலும்' என்ற தலைப்பில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவீதா முனுசாமி கருத்தரங்கில் உரையாற்றினார்.
எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம், கவிஞர் திருமால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி இளங்கவி, வழக்கறிஞர் தமிழரசு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.