/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தொழிற்சாலை பஸ் மோதி பெண் பரிதாப பலி தொழிற்சாலை பஸ் மோதி பெண் பரிதாப பலி
தொழிற்சாலை பஸ் மோதி பெண் பரிதாப பலி
தொழிற்சாலை பஸ் மோதி பெண் பரிதாப பலி
தொழிற்சாலை பஸ் மோதி பெண் பரிதாப பலி
ADDED : செப் 19, 2025 10:53 PM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் அருகே, டூ - வீலரில் சென்ற பெண், தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி உயிரிழந்தார்.
உத்திரமேரூர் ஒன்றியம், களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் மனைவி சுசிலா, 35; இவர், அதே பகுதியைச் சேர்ந்த முரளி மனைவி ராஜகுமாரி, 30, என்பவரோடு நேற்று முன்தினம், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், காஞ்சி புரம் சென்று மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் ஏகனாம்பேட்டை அருகே சென்ற போது, பின்னால் வந்த கட்டவாக்கத்தில் உள்ள மதர்ஷன் தொழிற்சாலை பேருந்து மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த சுசிலா, ராஜகுமாரி ஆகிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் மூலம் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று முன் தினம் இரவு சுசிலா உயிரிழந்தார். ராஜ குமாரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, சுசிலா உயிரிழப்புக்கு, கட்ட வாக்கம் மதர்ஷன் தொழிற்சாலைக்கான பேருந்து ஓட்டுநர், திருவண்ணாமலை மாவட்டம், முருகப்பட்டைச் சேர்ந்த சதாம் உசேன், 27, கவனக்குறைவே காரணம் எனக்கூறி, உறவினர்கள் நேற்று, மதியம் 1:00 மணிக்கு அத்தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.