/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோரைப்புற்கள் வளர்ந்துள்ள கன்னிகுளம் சீரமைக்கப்படுமா? கோரைப்புற்கள் வளர்ந்துள்ள கன்னிகுளம் சீரமைக்கப்படுமா?
கோரைப்புற்கள் வளர்ந்துள்ள கன்னிகுளம் சீரமைக்கப்படுமா?
கோரைப்புற்கள் வளர்ந்துள்ள கன்னிகுளம் சீரமைக்கப்படுமா?
கோரைப்புற்கள் வளர்ந்துள்ள கன்னிகுளம் சீரமைக்கப்படுமா?
ADDED : செப் 01, 2025 01:12 AM

முத்தியால்பேட்டை:செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ள முத்தியால்பேட்டை கன்னி கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள கன்னிகோவில் குளம் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
பல ஆண்டுகளாக இக்குளத்து நீரை எடுத்து கன்னி கோவிலில் அம்மன் அபிஷேகத்திற்காக பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது இக்குளத்தில் செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்து குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்து விட்டது.
மேலும், குளத்தில், செடிகளுக்கு இடையே தஞ்சமடைந்துள்ள விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது.
எனவே, கன்னிகோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.