ADDED : ஜூன் 17, 2025 12:08 AM

வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் கிராமத்தில் 160 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் அத்தண்ணீரைக் கொண்டு, 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
இந்நிலையில், கட்டவாக்கம் ஏரி, பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி துார்ந்து, ஏரிக்கரையொட்டி பல வகையான செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
இதனால், கோடைக் காலத்தில் குறைவான அளவு நீர் இருப்பு சமயங்களில், செடி, கொடிகள் தண்ணீரை உறிஞ்சி பாசனம் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, கட்டவாக்கம் ஏரிக்கரையொட்டி உள்ள செடி, கொடிகளை அகற்றுவதோடு, ஏரியை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.மணி, கட்டவாக்கம்.