/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிணற்றை காணோம் போஸ்டர் உத்திரமேரூரில் சலசலப்பு கிணற்றை காணோம் போஸ்டர் உத்திரமேரூரில் சலசலப்பு
கிணற்றை காணோம் போஸ்டர் உத்திரமேரூரில் சலசலப்பு
கிணற்றை காணோம் போஸ்டர் உத்திரமேரூரில் சலசலப்பு
கிணற்றை காணோம் போஸ்டர் உத்திரமேரூரில் சலசலப்பு
ADDED : மே 30, 2025 01:18 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சியில், நடுப்பட்டு துணை கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில், திறந்தநிலை குடிநீர் கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்று நீரை, 40 ஆண்டுகளாக, அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு முன் திறந்தநிலை கிணற்றை, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து உத்திரமேரூரில் உள்ள தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகிய இடங்களில், பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.