/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள் அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்
ADDED : மார் 16, 2025 01:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
இம்முகாமிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 5.90 கோடி ரூபாய் செலவில், 267 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, கலெக்டர், எம்.பி., ஆகிய இருவரும் வழங்கினர்.
வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் மற்றும் வருவாய், குடிமை பொருள், தோட்டக்கலை, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.