Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் சமுதாய கூடம் குத்தகை 3 ஆண்டுக்கு நீட்டிப்பு?

வாலாஜாபாத் சமுதாய கூடம் குத்தகை 3 ஆண்டுக்கு நீட்டிப்பு?

வாலாஜாபாத் சமுதாய கூடம் குத்தகை 3 ஆண்டுக்கு நீட்டிப்பு?

வாலாஜாபாத் சமுதாய கூடம் குத்தகை 3 ஆண்டுக்கு நீட்டிப்பு?

ADDED : ஜூன் 12, 2025 02:13 AM


Google News
காஞ்சிபுரம்:இரு ஆண்டுகளில், பேரூராட்சி தலைவரின் பதவிக்காலம் நிறைவு பெற இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு ஆண்டு சேர்த்து, மூன்று ஆண்டுகளுக்கு சமுதாயக்கூட கட்டடம் குத்தகை அனுமதிக்கு தீர்மானம் கொண்டு வந்திருப்பதில் உள் நோக்கம் இருப்பதாக, கவுன்சிலர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சதுக்கம் அருகே, அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், சமுதாயக்கூட கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியோர் பயன் பெற்று வந்தனர்.

தனி அலுவலர் கால கட்டங்களில் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், சமுதாயக்கூட கட்டடம் முறையாக நிர்வாகிக்க முடியவில்லை.

மேலும், வருவாய் நோக்கில், குத்தகை விடப்பட்டது. இதையடுத்து, தி.மு.க., பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி பொறுப்பிற்கு வந்த பின், டீ ஸ்டால் மற்றும் உணவகத்திற்கு, சமுதாயக்கூட கட்டடத்தை குத்தகை விட்டிருந்தார்.

இதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தனியார் உணவகம் குத்தகை காலம், கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றும், தொடர்ந்து உணவகம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், மூன்று ஆண்டு காலத்திற்கு குத்தகை தேதியை நீட்டிக்க இன்று நடைபெற விருக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

வரி நிலுவை இல்லாததால், குத்தகை விடலாம் என, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, குத்தகை அனுமதி என்பது ஆண்டுதோறும் புதுப்பிக்க கூடிய நிகழ்வாகும். ஒரே நேரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை அனுமதி அளிக்க முடியாது. இது, ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இடையே புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:

தற்போது பதவி வகித்து வரும் பேரூராட்சி தலைவரின் பதவிக்காலம் 2027, ஏப்ரல் மாதம் வரையில் உள்ளது. இந்த வணிக கட்டடம் குத்தகை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

முன் கூட்டியே பணத்தை வாங்கிக் கொண்டு உள்நோக்கத்தில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us