/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கிராம தொழிலாளர்கள் சம்மேளனம் காஞ்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 30, 2025 11:51 PM

காஞ்சிபுரம், மத்திய அரசினை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனத்தினர், நேற்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனனம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு, சென்னை உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்.
மத்திய அரசின், 100 நாள் வேலை வாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி தாமதம் இன்றி வழங்க வேண்டும். ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்கும் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை குறித்து, கோஷம் எழுப்பப்பட்டன.
ஐ.என்.டி.யு.சி., தமிழ்நாடு மாநில பொதுச் செயலர் பன்னீர்செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்வி.குப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.