/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பள்ளூர் - சோகண்டி சாலையில் கிராம பெயர் பலகை பொருத்தம்பள்ளூர் - சோகண்டி சாலையில் கிராம பெயர் பலகை பொருத்தம்
பள்ளூர் - சோகண்டி சாலையில் கிராம பெயர் பலகை பொருத்தம்
பள்ளூர் - சோகண்டி சாலையில் கிராம பெயர் பலகை பொருத்தம்
பள்ளூர் - சோகண்டி சாலையில் கிராம பெயர் பலகை பொருத்தம்
ADDED : ஜன 29, 2024 04:32 AM
பரந்துார் : பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒரு வழி சாலை இருந்தது.
இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக, விரிவுப்படுத்தும் பணி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழி சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
இந்த சாலை இருபுறமும், இரவில் ஒளிரும் தானியங்கி விளக்குகள் பொருத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் தானியங்கி எச்சரிக்கை விளக்கு பொருத்தினர். அதை தொடர்ந்து, வெள்ளை நிற கோடு போடப்பட்டன.
நேற்று முன்தினம், நெடுஞ்சாலை துறை சார்பில், கிராமங்களின் பெயர் பலகை பொருத்தி உள்ளனர்.
குறிப்பாக, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குறிப்பிடும் வகையில், கி.மீ., துாரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.